Tuesday, March 15, 2011

The Man from Nowhere

படங்களுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் வளரவில்லை என்றாலும் இந்த படத்தை பற்றி அறிமுகம் கொடுக்க தோன்றுகிறது.

கொரியா படங்களை அறிமுகம் செய்த பதிவுகள்:
http://cablesankar.blogspot.com/2011/02/i-saw-devil-2010-korea.html
http://cablesankar.blogspot.com/2011/03/midnight-fmkorea.html
http://www.thacinema.com/2011/02/i-saw-devil-2010-korean.html
http://www.thacinema.com/2011/01/mother-2009-madeo-korean.html
http://www.thacinema.com/2011/01/memories-of-murder-2003-korean-zodiac.html
http://www.thacinema.com/2010/09/kim-ji-woon-tale-of-two-sisters-2003.html

எனக்கு கொரியா படங்கள் கிடைக்கவில்லை என்றாலும்... தேடிகொண்டேருந்தேன். ஏதேச்சையாக ஒரு கடையில் Mother என்ற படம் முதலில் கிடைத்தது. இப்படம் பற்றி ThaCinema பதிவில் படித்திருந்ததால் உடனே வாங்கிக்கொண்டேன். இதுதான் நான் முதன் முதலாக பார்த்த கொரியா படம். அடுத்து Memories of Murder பார்த்தேன்.

நேற்று ஒரு கடையில் New Collections தேடி கொண்டு இருந்த பொது The Man From Nowhere என்ற படம் கிடைத்தது. அது கொரியா மொழி படம் என்பதாலும், 2010 இல் ரீலிசாகி இருந்ததாலும் உடனே வாங்கி கொண்டேன். மட்டுமல்லாமல் நேற்றே பார்த்தும்விட்டேன்.

படத்தை பற்றி:
படத்தின் ஹீரோ அடகு கடை(Pawn Shop) வைத்து அமைதியாக வாழ்வை நகர்த்துபவன். அதற்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில்லுள்ள சிறுபெண் மட்டுமே ஹீரோ உடன் நட்பு வைத்துள்ளாள். சிறுவர்களை வைத்து போதை பொருள் கடத்தும் ஒரு கும்பலிடம் ஒரு Situation இல் மாட்டிகொள்ளும் சிறுபெண்ணை ஹீரோ காப்பாற்றுவதே கதை.

கதையை மூன்றே வரிகளில் எழுதிவிட்டாலும் படம் பார்க்கிற அனுபவம் வேறு. நிறைய திருப்பங்களும் உண்டு. கிளைமாக்ஸ் தூள்... மியூசிக் உம் நன்றாக இருந்தது. இப்படத்தை பற்றி MSK, கேபிள் சங்கர், கருந்தேள் ஆகியோர் எல்லாம் எழுதினால் நன்றாக இருக்கும்... படத்தின் ஹீரோ mother படத்தில் ஹீரோவாக இருந்தவர் என்று idmb ல செக் செய்து தெரிந்து கொண்டேன்.

3 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  2. செம டைமிங் பரீத்தி.. சமீபத்தில்தான் இப்படம் கைக்கு வந்ததது.. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.. :)
    நன்றி..

    ReplyDelete
  3. கண்டிப்பா பாக்குரேன்.

    ReplyDelete