Thursday, April 14, 2011

என் ஹைக்கூ முயற்சி...




சுஜாதாவின் "ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்" பாதி படித்தேன்(நேற்று இரவு இரண்டு மணிக்கு). மீதி படிக்க வேண்டும்...

அதற்குள் அடியேனின் ஒரு சில முயற்சிகள்...


பூத்து குலுங்கும் மலர்கள்
அடுக்கு மாடிக் கட்டிடத்தின்
நிழலில்...



நிழல் பட்டதால்
விரிந்து சுருங்கும்
பட்டாம்பூச்சியின் இறகுகள்...


எழாயிரமாண்டு ஆயுள் தண்டனை
கொடுத்த அவள்
கட்டிப்பிடித்த குற்றத்திற்கு...
இவையெல்லாம் நேற்றிரவில் இருந்து இன்று காலை வரை எழுதியது... இவற்றில் குறையிருந்தால் கூறவும்... இது ஹைக்கூ வே இல்லை என்றாலும் கூறவும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் ஒரு வேகத்தில் எழுதியது.

ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பாக நான் எழுதிய ஹைக்கூ (எனக்கே தெரியாது அது ஹைக்கூ வடிவம் என்று.)
இதை ஆனந்த விகடனுக்கு கூட அனுப்பியிருந்தேன். ஆனால் பிரசுரிக்கவில்லை... அது இதோ...


ஈரம்
விண்ணுக்கும் உண்டு
மண்ணுக்கும் உண்டு
நடுவிலுள்ள மனிதர்களை தவிர...

3 comments:

  1. இதில் இருக்கும் தவுறுகளை சுட்டி காட்டவும்...

    ReplyDelete
  2. :)) ஹைக்கூ பத்தி எனக்கு எதுவும் தெரியாது..

    ஆனால் தொடர்ந்து எழுதுங்க.. எழுத எழுத தான் எழுத்து வடிவம் பெறும்..

    ReplyDelete