Wednesday, July 13, 2011

எனது முதல் முழு கவிதை.(கடல் அழகே)

கடலே என் கடலழகே - அலை
இமைக்கும் உன் கண் அழகே.
அலையாய் உன் இமைகளிங்கே - தெறிக்கும்
துளி நெஞ்சில் தெறித்திடுதே.

உனக்குள் நான் மூழ்காமலே - என்
மனதுள் நீ மூழ்கியதேனோ?
காலம் கனியும் முன்னே - உன்னில்
முழுதாய் கனிய நிணைப்பதேனோ?

நீ உயிற்பிக்கும் காற்றாய் நான் இருக்கிறேன்,
நித்தம் உன் மடியில் கிடக்க தவிக்கின்றேன்.
கிடக்க கிடக்க உன்னால் கொள்கின்றேன் - தாகம்
கொள்ளும்போதெல்லாம் உன்னில் தனிக்கின்றேன்.
என்ன கவ்ர்ச்சி உனக்கிங்கே? - உன்னில்
விழுந்து புரளும் என் மனமெங்கே?
இதழ்களில் என்ன இத்தனை ஈரம்? - அது
சைகை செய்யும் மொழியென்ன?

என் கொடுப்பேனிவ்வையத்திலுனக்கு?...
என் மொத்தத்தில் பாதியை முத்தமாய்
உன் மொத்தத்திற்கும் தரலாமோ?
முத்தமிட நான் வருகின்றேன் - வெட்கப்
பட்டு ஓடி ஒளிகின்றாய் - பொறுத்துக்
கொண்டு நான் சென்றால் - “பொது
இடத்தில்... ... ... ...” - என
அலை விடு தூது விடுகின்றாய்.

உப்புக்காற்றாய் சுவாசிக்காதே என்கிறாய்.
ஆனால்... ... ...
உன்னிலிருந்து வரும் வாசத்தை...
என் மனதும்கூட சுவாசிக்கிற்தே - அதை
என் உடலும் உணர்கிறதே.

காதல் கரையை தொட - உன்
அலையிங்கே வருகின்றதே - நான்
தொடுவதற்குள் என் கால் நனைத்து
திரும்ப திரும்பி போகின்றதே.
காத்திருப்பேன் உனக்காகவும்
உன் அலைக்காகவும்
முழுவதுமாக உன்னில் மூழ்க...
மேடு பள்ளம் மறைத்து - என்னுள்
விளையாடும் கடலே.
காலமும் அதற்கான நேரமும் வரும்...
தண்ணீர் நீக்கி உன் - வெட்டாந்
தரையில் நான் விளையாட...

கடைசியாக...
இதை சமர்பிக்கிறேன்...
கடலுக்கும்...
என் காவியத் தலைவிக்கும்...


தயவுசெய்து இதில் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டி comment செய்யவும்...

No comments:

Post a Comment