Saturday, October 1, 2011

வாகை சூட வா
சரியாக ஞாபகமில்லை. ஆனால் நான் சில பழைய படங்களில் பார்த்துள்ளேன். ஒரு கிராமத்திற்கு டீச்சர் ஒருவர் வருவார். அவருடன் ஒன்ற மறுக்கும் கிராமம். அதனால் டீச்சர் படும் சிரமம். பின்பு அவரின் ஏதாவதொரு Heroism. அதன்பின் கிராமமே அவருடன் ஜக்கியபடும்போது, அவர் பிரியவேண்டிய சூழ்நிலை. பிரியா விடை கொடுப்பாரா? மாட்டாரா? என்பது கிளைமாக்ஸ். (நடுவில் டீச்சர்... எதிர் பாலினத்தரோடு லவ்வுவார்.)

இத்தகைய கதையையே கள்வானி இயக்குநர் சற்குனம், பல சுவாரசியமான மாற்றங்கள் செய்து, ஒரு Social Message உடன் படமெடுத்துள்ளார், வாகை சூட வா என்ற பெயரில்.
டீச்சர் கெட்டப்பில் நன்றாகவே கஷ்டபடுகிறார் விமல். சர்க்காரில் வேலை கிடைக்கனும்னா... என்று சுயநலத்துடன் கிராமத்திற்கு வரும் விமல், சிறுவர்களை பிடிக்க சிரமப்டுவது, நாயகியுடன் வேள்ளந்தியாக சுற்றுவதும், கடைசியாக சுயநலத்தை உடைப்பதும் என நன்றாக நடித்துள்ளார்.
நாயகி நடிப்பதைவிட வெட்கபடுவதே அதிகம். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், பின் சலித்துவிடுகிறது. எல்லா Characterization உம் அருமை. முக்கியமாக தம்பி ராமையாவின் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குருவிகாரரின் detailing இன்னம் சிறிது கொடுத்திருக்கலாம்.

பாடல்கள் அனைத்தும் கேட்க அருமையாக இருந்தாலும், செங்கசூலக்காரா, அனா ஆவன்னா orchestra பாடலை தவிர வேறெதும் படத்துடன் ஒன்றவில்லை. பின்னனி இசையில் இன்னம் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். கலை இயக்கம் அருமை. ஒளிப்பதிவும் மண் வாசனையை கிளப்புகிறது.

shawshank redemption(எத்தன பேரு திட்ட போறாங்களோ?), Stanley ka dabba போல வந்திருக்க வேண்டிய படம். திரைகதையாலும், தேவையல்லாத காதல் காட்சிகளாலும் மையகருவை சிதைத்துவிட்டார்கள். களவானி இயக்குனரின் படமா? என ஆச்சரியபடுத்துகிறார் சற்குனம். திரைகதை அவ்வள்வு தோய்வு (களவானி படத்துடன் ஒப்பிட்டு கொள்ளவும்). ஆரம்ப காட்சிகளிலும், படம் நெடுகிலும் இயக்குநரின் கிராமத்தை பற்றிய ஆய்வின் உழைப்பு தெரிகிறது. இன்னம் உழைத்திருந்தால், “எஙகேயும் எப்போதும்” டம் போட்டியிட்டுருக்கலாம்.

எடுத்துகொண்டுள்ள கதைகருவுக்காகவும், கதை நெடுகிலுமுள்ள பல சின்ன சின்ன சுவாரசியங்களுக்காகவும், எதிர்காலங்களில் இதுபோன்ற படங்கள்(பிழையில்லாமல்) வருவதற்காகவும், ஒருமுறை தியேட்டரில் சென்று பாருங்கள்.


பின்குறிப்பு: குறையே அதிகம் கூறியுள்ளேன் என என்னிடம் முரண்டு பிடிக்க வேண்டாம். உண்மையில் இப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் திரைகதை சுவாரசயமின்னம காரணமாக ஆழமாக ஒன்ற முடியவில்லை.

Wednesday, September 21, 2011

மயக்கம் என்ன song lyric.

//இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது... அதான் சும்மா... எனக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும்(ஏதோ ஒன்று என்னை தாக்க)...ஒக் enjoy this Song...//

பாடல் : காதல் என் காதல்

படம் : மயக்கம் என்ன

இசை : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் வரி : தணுஷ்

பாடியவர்கள் : செல்வராகவன், தணுஷ்

இயக்கம் : செல்வராகவன்

**********

காதல் என் காதல் அது கண்ணீருல...

போச்சு அது போச்சு அட தண்ணீருல...

ஏ மச்சி... உட்ரா

ஏய்... என்ன பாட உட்ரா...

நா பாடியே தீருவேன்...

ச்சரி பாடி தொல...

காதல் என் காதல் அது கண்ணீருல...

போச்சு அது போச்சு அட தண்ணீருல...

காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள...

பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல...

அடிடா அவல, ஒதடா அவல,

விட்ரா அவல, தேவையே இல்ல...

எதுவும் புரில, உலகம் தெரில,

சரியா வரல, ஒன்னுமே இல்ல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல...

சூப்புல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல...

சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டன்...

ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள...

நண்ப(ன்) அழுவுற கஷ்டமா இருக்கு...

கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல...

தேன் ஊறுண நெஞ்சுக்குள்ள

கல் ஊறுதே என்ன சொல்ல

ஒ படகிருக்கு வலை இருக்கு

கடலுக்குள்ள மீனா இல்ல

வேணாடா வேணாம்

இந்த காதல் மோகம்

பொண்ணுங்க எல்லாம்

நம்ம வாழ்வின் சாபம்...

பின்னாடி போயி நா

கண்டேன் ஞானம்...

பட்டாச்சு சாமி

எனகிதுவே போதும்...

அடிடா அவல, ஒதடா அவல,

விட்ரா அவல, தேவையே இல்ல...

மான் விழி தேன்-மொழி

என் கிளி நான் பலி

காதலி காதலி-என்

பிகர் கண்ணகி...

ப்ரண்ட்ஸு கூடத்தான் இருக்கனும் மாமா...

பிகரு வந்துடா ரொம்ப தொல்ல...

உன்ன சுட்டவ உருப்பட மாட்ட...

உன்ன தவிர என்னகொன்னும் இல்ல...

ஒ... கனவிருக்கு கலரே இல்ல,

படம் பாக்கறேன்... கதையே இல்ல

உடம்பிருக்கு உயிரே இல்ல...

உறவிருக்கு, பெயரே இல்ல...

வேணாடா வேணாம் இந்த காதல் மோகம்

பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்...

பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்...

பட்டாச்சு சாமி… … … …

… … … … … … … ...போதும் மச்சான்...

அடிடா அவல... ஒதடா அவல...

விட்ரா அவல... தேவையே இல்ல...

எதுவும் புரில... உலகம் தெரில...

சரியா வரல... ஒன்னுமே இல்ல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது

குப்புன்னு அடிச்ச பீரினில...

படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்

காலைல அடிக்கிற மோருணுல...

குட் நைட்...

குட் நைட்...

அஹ... ஓகே...

ஹே...

குட் நைட்... தேங்க்யூ சோ மச் மச்சி...

Tuesday, September 13, 2011

அர்த்தமில்லா புரிதல்கள்...

ஏதும் வராத

அவளது மார்பில்

முகம் புதைத்து

எதையோ அருந்தி

கொண்டிருந்தேன்...


முனகல் சத்தம்

எதிர்ப்பார்த்து-அவள்

முகம் பார்த்த

என்னிடம்

பயத்துடனே

“அம்மா வந்துவிட்டால்...”

என்று பாடினனனனாள்...


சட்டென்று எழுந்து

அவளை அணைத்து

முத்தமிட்டு,

விலகினேன்.“என்ன வேண்டாமா?”

மீதியை கண்களில் கேட்டபடி...

***********************


மணம் புரிந்து

மகிழ்ச்சி கொள்வோம்,

இப்பொழுது

பயம் கொள்ளவேண்டாம்...

என்பதை அவளது

சுருள் சுருளான

தலைமுடிகளை வருடியபடி

(அப்படி செய்வது

எனக்கு மிகவும் பிடிக்கும்.)

விவரித்து முடித்து,

கிளம்பினேன்.


வண்டியில் வரும்போது

குறுஞ்செய்தியால்

கைப்பேசி பீப்பியது...

எனது தோழி ஒருத்தி

அணுப்பியிருந்ததாவது:

-----------------------------------------------


நீ ஆம்பள இல்லையாமே!

உன் ஆளு சொல்றா!


பின் குறிப்பு: இது ஒருசில கற்பனையோடு எழுதப்பட்டது.

Saturday, July 16, 2011

அலைபாயும் மனங்கள்...


சிறுகதை என்பது அலைபாயும் மனங்களின் பிம்பம் என்பது என் கருத்து.

சிறுகதைகளில் நாம் எதையோ கற்றுகொள்கிறோம். அது சில சமயம் நேரடியாயும் சில சமயம் மறைமுகமாகவும் க்ற்றுகொடுக்கிற்து. VTV சிம்பு போல சொல்ல வேண்டும் என்றால் அது போகிறப் போக்கில் நம்மை தாக்கி விட்டு செல்கிறது. அந்த தாக்கம் நம் மனதில் அல்லது நம் ஆழ் மனதில் நாம் அறிந்தோ அறியாமலோ தங்கி விடுகிறது.

எனக்கு புத்தகம் படிப்பதில் உள்ள ஆர்வத்தின் அடிதளம் சிறுவர் மலர் மற்றும் தங்க மலர் போன்ற இலவச இணைப்புகளில் வரும் சிறுகதைகளே. ஆகவே புத்தக அறிவை வளர்த்து கொள்ள விரும்புவோர் சிறுகதைகளில் இருந்து தொடங்கலாம்.

சிறுகதைகளில் உள்ள ஒரு பெரிய சாவாலே குறுகிய காலகட்டத்துள் வாசகனின் மனதை கட்டுப் படுத்தி கதையோடு ஒன்ற வைப்பதே. அடுத்து தேவையான விஷயத்தை வெளிப்படுத்தியும், தேவையற்றதை மறைத்தும் கதையினை கொண்டு போவது. அடுத்து கதையின் முடிவு.

இவையெல்லாம் என்னுடைய, சிறுகதைகளை பற்றிய புரிதல்களே.
இவை பதிவு செய்ய படுவதற்க்கான நோக்கம் என்னை நான் வளர்த்து கொள்ளவே. உங்களுடைய கருத்துகளையும் சொல்லவும்.

எழுத வேண்டிய விஷயம் நிறைய இருந்தாலும், இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

சிறிது நாட்களுக்கு முன் நான் மிகவும் ரசித்து படித்த சிறுகதை தொகுப்பு ஒன்றின் விமர்சனம் நாளை...

Wednesday, July 13, 2011

எனது முதல் முழு கவிதை.(கடல் அழகே)

கடலே என் கடலழகே - அலை
இமைக்கும் உன் கண் அழகே.
அலையாய் உன் இமைகளிங்கே - தெறிக்கும்
துளி நெஞ்சில் தெறித்திடுதே.

உனக்குள் நான் மூழ்காமலே - என்
மனதுள் நீ மூழ்கியதேனோ?
காலம் கனியும் முன்னே - உன்னில்
முழுதாய் கனிய நிணைப்பதேனோ?

நீ உயிற்பிக்கும் காற்றாய் நான் இருக்கிறேன்,
நித்தம் உன் மடியில் கிடக்க தவிக்கின்றேன்.
கிடக்க கிடக்க உன்னால் கொள்கின்றேன் - தாகம்
கொள்ளும்போதெல்லாம் உன்னில் தனிக்கின்றேன்.
என்ன கவ்ர்ச்சி உனக்கிங்கே? - உன்னில்
விழுந்து புரளும் என் மனமெங்கே?
இதழ்களில் என்ன இத்தனை ஈரம்? - அது
சைகை செய்யும் மொழியென்ன?

என் கொடுப்பேனிவ்வையத்திலுனக்கு?...
என் மொத்தத்தில் பாதியை முத்தமாய்
உன் மொத்தத்திற்கும் தரலாமோ?
முத்தமிட நான் வருகின்றேன் - வெட்கப்
பட்டு ஓடி ஒளிகின்றாய் - பொறுத்துக்
கொண்டு நான் சென்றால் - “பொது
இடத்தில்... ... ... ...” - என
அலை விடு தூது விடுகின்றாய்.

உப்புக்காற்றாய் சுவாசிக்காதே என்கிறாய்.
ஆனால்... ... ...
உன்னிலிருந்து வரும் வாசத்தை...
என் மனதும்கூட சுவாசிக்கிற்தே - அதை
என் உடலும் உணர்கிறதே.

காதல் கரையை தொட - உன்
அலையிங்கே வருகின்றதே - நான்
தொடுவதற்குள் என் கால் நனைத்து
திரும்ப திரும்பி போகின்றதே.
காத்திருப்பேன் உனக்காகவும்
உன் அலைக்காகவும்
முழுவதுமாக உன்னில் மூழ்க...
மேடு பள்ளம் மறைத்து - என்னுள்
விளையாடும் கடலே.
காலமும் அதற்கான நேரமும் வரும்...
தண்ணீர் நீக்கி உன் - வெட்டாந்
தரையில் நான் விளையாட...

கடைசியாக...
இதை சமர்பிக்கிறேன்...
கடலுக்கும்...
என் காவியத் தலைவிக்கும்...


தயவுசெய்து இதில் இருக்கும் பிழைகளை சுட்டிக் காட்டி comment செய்யவும்...

Thursday, April 14, 2011

என் ஹைக்கூ முயற்சி...
சுஜாதாவின் "ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்" பாதி படித்தேன்(நேற்று இரவு இரண்டு மணிக்கு). மீதி படிக்க வேண்டும்...

அதற்குள் அடியேனின் ஒரு சில முயற்சிகள்...


பூத்து குலுங்கும் மலர்கள்
அடுக்கு மாடிக் கட்டிடத்தின்
நிழலில்...நிழல் பட்டதால்
விரிந்து சுருங்கும்
பட்டாம்பூச்சியின் இறகுகள்...


எழாயிரமாண்டு ஆயுள் தண்டனை
கொடுத்த அவள்
கட்டிப்பிடித்த குற்றத்திற்கு...
இவையெல்லாம் நேற்றிரவில் இருந்து இன்று காலை வரை எழுதியது... இவற்றில் குறையிருந்தால் கூறவும்... இது ஹைக்கூ வே இல்லை என்றாலும் கூறவும் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இவையெல்லாம் ஒரு வேகத்தில் எழுதியது.

ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்பாக நான் எழுதிய ஹைக்கூ (எனக்கே தெரியாது அது ஹைக்கூ வடிவம் என்று.)
இதை ஆனந்த விகடனுக்கு கூட அனுப்பியிருந்தேன். ஆனால் பிரசுரிக்கவில்லை... அது இதோ...


ஈரம்
விண்ணுக்கும் உண்டு
மண்ணுக்கும் உண்டு
நடுவிலுள்ள மனிதர்களை தவிர...

Tuesday, March 15, 2011

The Man from Nowhere

படங்களுக்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் வளரவில்லை என்றாலும் இந்த படத்தை பற்றி அறிமுகம் கொடுக்க தோன்றுகிறது.

கொரியா படங்களை அறிமுகம் செய்த பதிவுகள்:
http://cablesankar.blogspot.com/2011/02/i-saw-devil-2010-korea.html
http://cablesankar.blogspot.com/2011/03/midnight-fmkorea.html
http://www.thacinema.com/2011/02/i-saw-devil-2010-korean.html
http://www.thacinema.com/2011/01/mother-2009-madeo-korean.html
http://www.thacinema.com/2011/01/memories-of-murder-2003-korean-zodiac.html
http://www.thacinema.com/2010/09/kim-ji-woon-tale-of-two-sisters-2003.html

எனக்கு கொரியா படங்கள் கிடைக்கவில்லை என்றாலும்... தேடிகொண்டேருந்தேன். ஏதேச்சையாக ஒரு கடையில் Mother என்ற படம் முதலில் கிடைத்தது. இப்படம் பற்றி ThaCinema பதிவில் படித்திருந்ததால் உடனே வாங்கிக்கொண்டேன். இதுதான் நான் முதன் முதலாக பார்த்த கொரியா படம். அடுத்து Memories of Murder பார்த்தேன்.

நேற்று ஒரு கடையில் New Collections தேடி கொண்டு இருந்த பொது The Man From Nowhere என்ற படம் கிடைத்தது. அது கொரியா மொழி படம் என்பதாலும், 2010 இல் ரீலிசாகி இருந்ததாலும் உடனே வாங்கி கொண்டேன். மட்டுமல்லாமல் நேற்றே பார்த்தும்விட்டேன்.

படத்தை பற்றி:
படத்தின் ஹீரோ அடகு கடை(Pawn Shop) வைத்து அமைதியாக வாழ்வை நகர்த்துபவன். அதற்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில்லுள்ள சிறுபெண் மட்டுமே ஹீரோ உடன் நட்பு வைத்துள்ளாள். சிறுவர்களை வைத்து போதை பொருள் கடத்தும் ஒரு கும்பலிடம் ஒரு Situation இல் மாட்டிகொள்ளும் சிறுபெண்ணை ஹீரோ காப்பாற்றுவதே கதை.

கதையை மூன்றே வரிகளில் எழுதிவிட்டாலும் படம் பார்க்கிற அனுபவம் வேறு. நிறைய திருப்பங்களும் உண்டு. கிளைமாக்ஸ் தூள்... மியூசிக் உம் நன்றாக இருந்தது. இப்படத்தை பற்றி MSK, கேபிள் சங்கர், கருந்தேள் ஆகியோர் எல்லாம் எழுதினால் நன்றாக இருக்கும்... படத்தின் ஹீரோ mother படத்தில் ஹீரோவாக இருந்தவர் என்று idmb ல செக் செய்து தெரிந்து கொண்டேன்.

Thursday, March 10, 2011

எழுதுவது எப்படி?


நன்றாக எழுதுவது எப்படி?


பல மாதங்களுக்கு முன் என் இலக்கிய ஆசிரியர் (நண்பர்) இதைப்பற்றி சொல்லிகொண்டிருந்தார். அது...
"நன்றாக எழுத வேண்டும் என்றால்... முதலில் எழுத ஆரம்பிக்க வேண்டும். எழுதிய உடனே சொல்வளம் வந்து விடாது. நீ எழுதி பழக பழகவே வரும்."

உங்களுடைய பதிவுகளை எல்லாம் பார்க்கும் பொது நான் எழுதினால் நான் எழுதினால் நன்றாக இருக்குமா? என்று ஒரு விதமான கூச்சம்(Guilty Feel) ஏற்பட்டதுண்டு.

ஆனால் இப்போது எழுதுகிறேன்... உங்களில் ஒருவனாக அல்ல. உங்கள் மாணவனாக...

நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நெறையவே உள்ளன. உங்கள் மாணவனாக என்னை ஏற்று உங்களது கருத்துக்களை எனக்கு வழங்குங்கள்.

எனக்கு மிகவும் பிடித்த விஷயம் "ஆரோக்கியமான விவாதம்". நிறைய விவாதித்து தெளிவு பெறுவோம்.

எனக்கு பிடித்தவற்றை எல்லாம் இங்கே பகிர்ந்துகொள்வேன்... உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

பின் குறிப்பு: நான் Broadband வைத்தில்லா காரணத்தால் உங்கள் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் தெரிவிக்க முடியாது...