
நன்றாக எழுதுவது எப்படி?
பல மாதங்களுக்கு முன் என் இலக்கிய ஆசிரியர் (நண்பர்) இதைப்பற்றி சொல்லிகொண்டிருந்தார். அது...
"நன்றாக எழுத வேண்டும் என்றால்... முதலில் எழுத ஆரம்பிக்க வேண்டும். எழுதிய உடனே சொல்வளம் வந்து விடாது. நீ எழுதி பழக பழகவே வரும்."
உங்களுடைய பதிவுகளை எல்லாம் பார்க்கும் பொது நான் எழுதினால் நான் எழுதினால் நன்றாக இருக்குமா? என்று ஒரு விதமான கூச்சம்(Guilty Feel) ஏற்பட்டதுண்டு.
ஆனால் இப்போது எழுதுகிறேன்... உங்களில் ஒருவனாக அல்ல. உங்கள் மாணவனாக...
நான் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நெறையவே உள்ளன. உங்கள் மாணவனாக என்னை ஏற்று உங்களது கருத்துக்களை எனக்கு வழங்குங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த விஷயம் "ஆரோக்கியமான விவாதம்". நிறைய விவாதித்து தெளிவு பெறுவோம்.
எனக்கு பிடித்தவற்றை எல்லாம் இங்கே பகிர்ந்துகொள்வேன்... உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...
பின் குறிப்பு: நான் Broadband வைத்தில்லா காரணத்தால் உங்கள் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் தெரிவிக்க முடியாது...
No comments:
Post a Comment