Saturday, July 16, 2011

அலைபாயும் மனங்கள்...


சிறுகதை என்பது அலைபாயும் மனங்களின் பிம்பம் என்பது என் கருத்து.

சிறுகதைகளில் நாம் எதையோ கற்றுகொள்கிறோம். அது சில சமயம் நேரடியாயும் சில சமயம் மறைமுகமாகவும் க்ற்றுகொடுக்கிற்து. VTV சிம்பு போல சொல்ல வேண்டும் என்றால் அது போகிறப் போக்கில் நம்மை தாக்கி விட்டு செல்கிறது. அந்த தாக்கம் நம் மனதில் அல்லது நம் ஆழ் மனதில் நாம் அறிந்தோ அறியாமலோ தங்கி விடுகிறது.

எனக்கு புத்தகம் படிப்பதில் உள்ள ஆர்வத்தின் அடிதளம் சிறுவர் மலர் மற்றும் தங்க மலர் போன்ற இலவச இணைப்புகளில் வரும் சிறுகதைகளே. ஆகவே புத்தக அறிவை வளர்த்து கொள்ள விரும்புவோர் சிறுகதைகளில் இருந்து தொடங்கலாம்.

சிறுகதைகளில் உள்ள ஒரு பெரிய சாவாலே குறுகிய காலகட்டத்துள் வாசகனின் மனதை கட்டுப் படுத்தி கதையோடு ஒன்ற வைப்பதே. அடுத்து தேவையான விஷயத்தை வெளிப்படுத்தியும், தேவையற்றதை மறைத்தும் கதையினை கொண்டு போவது. அடுத்து கதையின் முடிவு.

இவையெல்லாம் என்னுடைய, சிறுகதைகளை பற்றிய புரிதல்களே.
இவை பதிவு செய்ய படுவதற்க்கான நோக்கம் என்னை நான் வளர்த்து கொள்ளவே. உங்களுடைய கருத்துகளையும் சொல்லவும்.

எழுத வேண்டிய விஷயம் நிறைய இருந்தாலும், இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

சிறிது நாட்களுக்கு முன் நான் மிகவும் ரசித்து படித்த சிறுகதை தொகுப்பு ஒன்றின் விமர்சனம் நாளை...

1 comment: