Saturday, October 1, 2011

வாகை சூட வா




சரியாக ஞாபகமில்லை. ஆனால் நான் சில பழைய படங்களில் பார்த்துள்ளேன். ஒரு கிராமத்திற்கு டீச்சர் ஒருவர் வருவார். அவருடன் ஒன்ற மறுக்கும் கிராமம். அதனால் டீச்சர் படும் சிரமம். பின்பு அவரின் ஏதாவதொரு Heroism. அதன்பின் கிராமமே அவருடன் ஜக்கியபடும்போது, அவர் பிரியவேண்டிய சூழ்நிலை. பிரியா விடை கொடுப்பாரா? மாட்டாரா? என்பது கிளைமாக்ஸ். (நடுவில் டீச்சர்... எதிர் பாலினத்தரோடு லவ்வுவார்.)

இத்தகைய கதையையே கள்வானி இயக்குநர் சற்குனம், பல சுவாரசியமான மாற்றங்கள் செய்து, ஒரு Social Message உடன் படமெடுத்துள்ளார், வாகை சூட வா என்ற பெயரில்.
டீச்சர் கெட்டப்பில் நன்றாகவே கஷ்டபடுகிறார் விமல். சர்க்காரில் வேலை கிடைக்கனும்னா... என்று சுயநலத்துடன் கிராமத்திற்கு வரும் விமல், சிறுவர்களை பிடிக்க சிரமப்டுவது, நாயகியுடன் வேள்ளந்தியாக சுற்றுவதும், கடைசியாக சுயநலத்தை உடைப்பதும் என நன்றாக நடித்துள்ளார்.
நாயகி நடிப்பதைவிட வெட்கபடுவதே அதிகம். ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், பின் சலித்துவிடுகிறது. எல்லா Characterization உம் அருமை. முக்கியமாக தம்பி ராமையாவின் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குருவிகாரரின் detailing இன்னம் சிறிது கொடுத்திருக்கலாம்.

பாடல்கள் அனைத்தும் கேட்க அருமையாக இருந்தாலும், செங்கசூலக்காரா, அனா ஆவன்னா orchestra பாடலை தவிர வேறெதும் படத்துடன் ஒன்றவில்லை. பின்னனி இசையில் இன்னம் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். கலை இயக்கம் அருமை. ஒளிப்பதிவும் மண் வாசனையை கிளப்புகிறது.

shawshank redemption(எத்தன பேரு திட்ட போறாங்களோ?), Stanley ka dabba போல வந்திருக்க வேண்டிய படம். திரைகதையாலும், தேவையல்லாத காதல் காட்சிகளாலும் மையகருவை சிதைத்துவிட்டார்கள். களவானி இயக்குனரின் படமா? என ஆச்சரியபடுத்துகிறார் சற்குனம். திரைகதை அவ்வள்வு தோய்வு (களவானி படத்துடன் ஒப்பிட்டு கொள்ளவும்). ஆரம்ப காட்சிகளிலும், படம் நெடுகிலும் இயக்குநரின் கிராமத்தை பற்றிய ஆய்வின் உழைப்பு தெரிகிறது. இன்னம் உழைத்திருந்தால், “எஙகேயும் எப்போதும்” டம் போட்டியிட்டுருக்கலாம்.

எடுத்துகொண்டுள்ள கதைகருவுக்காகவும், கதை நெடுகிலுமுள்ள பல சின்ன சின்ன சுவாரசியங்களுக்காகவும், எதிர்காலங்களில் இதுபோன்ற படங்கள்(பிழையில்லாமல்) வருவதற்காகவும், ஒருமுறை தியேட்டரில் சென்று பாருங்கள்.


பின்குறிப்பு: குறையே அதிகம் கூறியுள்ளேன் என என்னிடம் முரண்டு பிடிக்க வேண்டாம். உண்மையில் இப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் திரைகதை சுவாரசயமின்னம காரணமாக ஆழமாக ஒன்ற முடியவில்லை.

2 comments:

  1. நல்ல விமர்சனம்.......எனக்கும் சில காட்ச்களை பார்கும் போது களவாணி இயக்குனரா இது என்று தோன்றியது... குருவி இறந்தவுடன் விமல் ஃபலஸ்பேகில் மேலே பார்பது மற்றும் சில காட்சிகளை பார்தால் அழுதம் குரைவாகவே உள்ளது....என்னை பொருத்தவரை இது ஒகே படம் அவ்வள்வு தான்...

    ReplyDelete